Thursday, 31 January 2013
Tuesday, 29 January 2013
Friday, 18 January 2013
புனித செபஸ்தியார்
புனித செபஸ்தியாரின் வாழ்க்கை வரலாறு
புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டில் நர்போன் நகரில் கி.பி 257 ஆம் ஆண்டு பிறந்து இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்து, வனப்பு மிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.
செபஸ்தியார் துன்புற்ற கிறிஸ்தவர்களுக் கு உதவும் நோக்கத்தோடு, உரோமை பேரரசன் தியோக்கிளேசியன் படையில் சேர்ந்தார். தன் வீரத்தாலும் தீரத்தாலும் வெற்றி வாகைகள் பல சூடினார். தியோக்கிளேசியன் தான் வெற்றி பெற்ற உரோமானிய கீழ்திசை நாடுகளுக்கு மன்னனாக தன் தம்பி மாக்சிமியனை நியமித்தான். மன்னன் மாக்சிமியன் செபஸ்தியாரின் வீர தீரத்தையும், நற்குணங்களையும் கண்டு வியந்து, அவரை தன் படைத் தளபதியாகவும், நம்பிக்கையுள்ள மெய்காப்பாளராகவ ும், நண்பராகவும் ஆக்கிக் கொண்டான்.
அன்புப்பணி:
செபஸ்தியார் அன்னை மரியை தாயாகவும், இயேசு கிறிஸ்துவைத்தன் அரசராகவும் கொண்டு திருத்தந்தைக்கு அன்பு மகனாக விளங்கினார். தன் பட்டங்களையும் பதவிகளையும் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்கும், சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கும் கிறிஸ்தவர்களுக் கும் அடிமைகளுக்கும் ஆதரவளித்து உதவி வந்தார்.
செபஸ்தியார் பொது மக்களிடமும் நன்மதிப்புப் பெற்றிருந்தார். அக்காலத்தில் வாழ்ந்த இளைஞர்களுக்கு அருமை அண்ணனாகவும், நண்பனாகவும் திகழ்ந்தார். பங்கிராஸ் என்ற வாலிபனைத் தன் அரவணைப்பிலேயே பாதுகாத்து வந்தார். பங்கிராசும் அவரை ‘அண்ணன் என்று அன்புடன் அழைத்து வந்தார்.
சுரங்கக்கோயில், கல்லறை போன்றவற்றை காத்து வந்த தியோஜனன் என்ற முதியவரின் இரு இளம் மகன்களும் அவர்களது நண்பர்களும் செபஸ்தியார் பேரில் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர்க ளில் குறிப்பிடதக்கவர ாவர். பங்கிராசின் தந்தை புனித லாரன்ஸ் போன்றோர் வேதகலாபனையில் வீர மரணம் அடைந்தபின் செபஸதியாரின் காலம் புயல் ஓய்ந்த அமைதி போல் இருந்தது.
துன்பங்களின் தொடக்கம்:
உரோமைப் பேரரசின் சக்கரவர்த்தி தியோக்கிளேசியன் புதிதாகப் பரவி வளர்ந்து வந்த இயேசு கிறிஸ்துவின் சத்திய மறையின் மேல் வெறுப்பு கொண்டான்.
கிறிஸ்தவர்களுக் கென்று தனித்தலைவர், தனிச்சட்டம் அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற கொள்கை, மனிதனுக்கு மனிதன் சமம் என்ற கோட்பாடுகள் எல்லாம் அரசனே தெய்வம் என்ற எண்ணம் கொண்ட தியேக்கிளேசியனி ன்; கோபக்கனலுக்கு நெய் வார்த்தன. அவன் தன் தம்பி மாக்சீமியனுக்கு க் கடிதம் எழுதி கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கக் கேட்டுக்கொண்டான ். மன்னன் மாக்சீமியன் கொடுங்கோலன். கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக் கு பாதி சொத்தும் மீதி மன்னனுக்கும் என்று ஆணை பிறப்பித்தான். பேராசைக்காரர்கள ும் கொடியவர்களும் கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுத்து ஆதாயம் தேடினர். கிறிஸ்தவர்களை கொடிய விலங்குகளுக்கு இரையாக்கி, சித்திரவதை செய்தும் மகிழ்ச்சி கொண்டனர்.
கொடியவன் கோர்வீனன் பங்கிராசின் ஆசிரியர் காசியானைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்றான். பாதாள சிறைகளில் அடைக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக் கு உணவு வழங்;கி, ஆறுதல் கூறி, ஆதரித்து வந்தார் செபஸ்தியார்.
மார்க்கூஸ்-மர்ச ெல்லியான்:
பொதுச்சிறையில் அடைக்ககப்பட்டிர ுந்த மார்கூஸ், மர்செலியான் என்னும் இரு சகோதரர்கள் தங்கள் வயோதிக பெற்றோரின் விருப்பத்திற்கி ணங்க கிறிஸ்தவ மதத்தை மறுதலிக்க தயாராக இருந்தனர்.அச்செ ய்தியை அறிந்த செபஸ்தியார் விரைந்து சென்று வானவர்கள் மறைசாட்;சிகளுக் கான மணிமுடியை தலையில் சூடப்போகும் நேரத்தில், வேண்டாம!; என தள்ள உங்களுக்கு எப்படி மனம் வந்தது.? மனிதனாகிய என்னைப் பார்த்து வெட்க்கப்பட்டு ஒளிந்துக் கொள்ளும் நீங்கள், அதிக வல்லமையோடு இயேசு கிறிஸ்து வரும் போது எங்கு சென்று மறைந்து கொள்வீர்கள்? என்று பலவாறாக புத்திமதி சொல்லி அவர்களை திடப்படுத்தினார ்.
அவரது இனிமையான கருத்தாழம் மிக்க உரையினால் சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் திருமுழுக்கு பெற முழு மனதாய் இருந்தனர். ஆனால் சிறைத் தலைவன் நிக்கோஸ் கிராஸ்துஸ்; தளபதியே நான் சிறைக்கதவை பூட்டவேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினான்.
சிறையில் இருந்த அனைவர் நலத்தையும் கருத்தில் கொண்டு அவன் மனைவி ஜோயே அம்மாவிடம் அவனுக்கு புத்திமதி கூறுமாறு செபஸ்தியார் கேட்டுக்கொண்டார ். ஆனால் அவள் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு ஆறு வருடங்களாக ஊமையாய் இருப்பதை அறிந்து உருக்கமாய் செபித்து அவள் நாவில் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப்பேச வைத்தார். சிறையில் இருந்தோர் அனைவரும் சத்திய மறையை ஏற்றனர். சிறை அதிகாரி நிக்கோஸ் கிராஸ்துஸ் மனம் மாறினார். புது கிறிஸ்தவர்களை தம் வீட்டிலேயே பாதுக்காப்பாக வைப்பதாகக் கூறினார். அனைவரும் செபஸ்தியாரின் பாதம் மண்டியிட்டு கடவுளை போற்றினர்.
திமிர்வாதத்தை குணமாக்குதல்:
நகர அதிகாரி குரோமோசியான் பக்கவாதத்தால் படுத்தபடுக்கையா க இருந்தார்.சிறைய ில் நடந்த அருள் அடையாளங்களை சிறை அதிகாரி வழியாகக் கேள்விப்பட்டு, செபஸதியாரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீரத்தளபதி செபஸ்தியார், இறைவன் பாதம் மண்டியிட்டு, உருக்கமாக செபித்து, நகர் அதிகாரியின் உடம்பில் சிலுவை அடையாளம் வரைந்தார். உடனே நகர் அதிகாரி சுகம் அடைந்தார். அவரும் அவர் மகன் திபூர்சியான் என்ற இளைஞனும் கிறிஸ்தவர்கள் ஆயினர்.
பேராசைக்காரனின் சந்தேகம்:
உரோமைப் பேரரசின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீரத்தளபதியாகிய செபஸ்தியார் ரோமானிய இளைஞர்களைப்போல் அன்றி, ஒழுக்கத்திலும் நற்குணங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்த்த பேராசைக்காரன் புல்வியன், இவர் கிறிஸ்தவராகத்தா ன் இருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டான்.இப்படி யிருக்க பங்கிராசைக் கோர்வீனன் பிடித்துக் கொடுக்க, அவர் வேங்கைக்கு இரையாக்கப்பட்டா ர். இக்கொடிய காட்சியைக் கண்டு கண் கலங்கிய செபஸ்தியாரைப் பார்த்த புல்வியன், இவர் கிறிஸ்தவர் தான் என்பதை உறுதி செய்து கொண்டான்.
புனிதரின் துணிவு:
பிறர் ஆஸ்தியின் பேரில் ஆசைக் கொண்ட புல்வியன் அவரைக் காட்டிக்கொடுக்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். செபஸ்தியாரோ தன் சொத்துக்கள் அனைத்தையும் இரகசியமாய் விற்று ஏழைகளுக்க கொடுத்து விட்டார். இதை அறியாத புல்வியன் ஒரு நாள் கொலுமண்டபத்தில் நுளைந்து, மன்னனிடம், ‘அரசே தளபதி செபஸ்தியார் கிறிஸ்தவர் என்றான். மன்னன், மகா கோபம் கொண்டு புல்வியனை கொல்லப்போகும் போது செபஸ்தியார் எழுந்து,
‘மன்னா! ஆத்திரம் வேண்டாம்!
நான் கிறிஸ்தவன்: கிறிஸ்தவனாய்
இருப்பது என் பாக்கியம்’ என்றார் அமைதியாக
மன்னன் அதிர்ந்து போய் அமர்ந்து விட்டான். ‘நன்றி கெட்டவன்’ என்று வாயில் வந்தபடி தளபதியாரைத் திட்டத் தொடங்கினான். ஆனால் அவர் அஞ்சவும் இல்லை. அசையவுமில்லை.
மன்னன், ‘தளபதியாரே நீர் உம்முடைய இந்த வேதத்தை விட்டவிடும். நான் மேலும் உமக்கு பல பட்டங்களும் பதவிகளும் தந்து சிறப்பிக்கிறேன் . என் முதன்மைப் படைத்தளபதியையும ், என் மெய்க்காப்பாளரை யும் இழக்க முடியாது. ஆகவே தாங்கள் மறுப்பதாக மட்டும் சொன்னால் போதும். ஏனெனில் சட்டத்தை மாற்ற முடியாது’ என்று வேண்டினான். ஆனால் செபஸ்தியார் தான் வணங்கும் தேவன்; உண்மையானவர் அவரை மறுதலிக்க முடியாது. கிறிஸ்து ஒருவருக்கே கீழ்படிய முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
ஆத்திரம் கொண்ட மன்னன் மாக்சீமியன் கோத்திராத்தூசிட ம் அவரை கைது செய்யக் கூறினான். கோத்திராத்தூஸ் மறுக்கவே, கோத்திராத்தூஸ் கிறிஸ்தவர் என்பதை அறிந்து, உடனே வெளியில் இழுத்துச் சென்று கொல்ல உத்தரவிட்டான்.
செபஸ்தியார்; அம்புகளால் எய்யப்படுதல்:
வெளிப்படையாக மற்ற கிறிஸ்தவர்களைப் போல் செபஸ்தியாரைக் கொன்றால் நாட்டில் குழப்பம் உண்டாகும் என்று அஞ்சிய மன்னன், அவரை இரகசியமாய் ஒர் அறையில் அடைத்து வைத்தான்.
ஆப்பிரிக்க நாட்டு வில் வீரன் அபாக்கியானை அழைத்து, ‘செபஸ்தியாரை இன்று இரவே 2 மணிக்குமேல் காட்டுப்பக்கம்; கொண்டு சென்று மரத்தில் கட்டி வைத்து, அணு அணுவாக வேதனைப்படுத்தி சல்லடையாக அம்பால் துளைத்து, சித்திரவதைப்படு த்தி, கொல்லுங்கள் தலை, இதயம், வயிறு போன்ற வர்ம இடங்களில் அம்பு எய்து உடனே கொன்றுவிடக் கூடாது. என்று கோபாவேசமாக மாக்சிமியன் கட்டளையிட்டான்.
முழந்தாள் படியிட்டு ஒர் வானதூதன் போல் இருகைகளையும் விரித்து செபித்துக் கொண்டிருந்த செபஸ்தியாரைப் பார்த்து வியந்து வணங்கினான் அபாக்கியான். பின்னர் மன்னன் கட்டளையை நிறைவேற்ற அழைத்துச்சென்றா ன்.
பட்டமரம் பூத்த காட்சி:
காட்டில் பட்டமரத்தில் கட்டிவைத்து மன்னனின் கட்டளைப்படி அம்பால் எய்தனர் வில்வீரர்கள். இறந்துவிட்டார் என நினைத்து கட்டுகளை அவிழ்க்க மரித்தவர் போல் கீழே விழுந்தார். செபஸ்தியாரை கட்டி வைத்த பட்டமரம் பட்டொளிவீசிப் பூத்துக்குலுங்க ியது. வில்வீரர்கள் அஞ்சி நடுங்கி ஒடினர்.
அங்குவந்த சில கிறிஸ்தவ வீரர்கள் செபஸ்தியாரின் உடலில் உயிர் இருப்பதைக்கண்டு , இரேனே அம்மாள் என்ற கிறிஸ்தவப் பெண்ணின் வீட்டில் சேர்த்தனர். மருத்துவ குருவால் சிகிட்சை அளிக்கப்பட்டு மயக்கம் தெளிந்தார் செயஸ்தியார்: தன் பெரிய வேதனைக்குப் பின்னும் இவ்வுலகிலேயே இருப்பதை நினைத்து வருந்தினார்.
கற்பின் சிகரம்:
கால்ஊன்றி நிற்கும் வலுப்பெற்றவுடனே , கொடியவன் கொடுங்கோன்மையை எதிர்த்து குரல் எழுப்பி, தட்டிக்கேட்கப் போவதாகக் கூறினார். வேண்டாம் என்று குருவானவரும் மற்றவர்களும் தடுத்தனர்.ரோமைப ்பிரபு பபியானின் ஒரே மகள் பபியோலா, மன்னனிடம் இனி மேல் சொல்ல வேண்டாம் என்று பணிந்து வேண்டியும் செபஸ்தியார் சம்மதிக்கவில்லை . ஆகவே அவருக்காக பரிந்து பேச அவளே மன்னனிடம் சென்றாள்.
வேதசாட்சி முடி:
கி.பி 288 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள், செபஸ்தியார் மீண்டும் கால் ஊன்றிய முதல் நாள், செபஸ்தியார் மாடிமீது நின்றபடி மாக்சிமியா! மாக்சிமியா என்று அவனை பெயர் சொல்லி அழைத்தார். இரேனே அம்மாவின் வீடு அரண்மனைக்கு அருகில் என்பதால் மன்னன் அவனைக் கண்டான். அவர் உயிருடன் எலும்பும் தோலுமாக நிற்;பதைக்கண்டு வானுலகிலிருந்து நம்மை சபிப்பதற்கே அனுப்பப்பட்டாரோ ? என்று அஞ்சி நடுங்கினான். அவர் மாக்சிமியா! கொடுங்கோலனே! குற்றமற்றவர்களை யும் கொன்று குவிக்கிறாயே! இதோ!தெய்வ கோபாக்கினை என்னும் இடி உன் தலைமேல் விழப்போகிறது. மனம் வருந்தி மன்னிப்புக்கேட் டால் தப்பிப் பிழைப்பாய், இல்லையேல் காப்பாற்றுவார் இல்லாமல் அழிந்துபோவாய். கடவுளின் பெயரால் உன்னை எச்சரிக்கிறேன்’ என்றார் செபஸ்தியார்.
கோபம் கொண்ட மன்னன் அவர் உயிருடன் இருப்பதைக்கண்டு , அவரை இழுத்து வந்து, தன் முன்னிலையில் தடியால் அடித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். கண்ணெதிரில் நடந்த படுகொலையைக் கண்ட பபியோலா மனம் வெதும்பி இல்லம் சென்றாள். கிறிஸ்தவள் ஆனாள். காலமெல்லாம் கன்னியாக வாழ்ந்து தன் வாழ்வை இயேசுவுக்காகவும ், தன் பெருஞ் செல்வத்தை ஏழை எளியவர்களுக்காக வும் செலவிட்டாள்.
உடல் அடக்கம்:
செபஸ்தியாரின் உடல் கல்லுடன் கட்டி சாக்கடையில் போடப்பட்டது. அன்று இரவே நம் புனிதர்; பங்கிராசின் அன்னைலூசினாவின் கனவில் தோன்றி, தன் உடல் இருக்கும் இடத்தை தெரிவித்தார்.அப ்புண்ணியவதி உடனே ஆட்களை அனுப்பி அவ்வுடலை எடுத்துவரச் செய்தார். செபஸ்தியாரின் திரு உடல் சுரங்கக் கல்லறையில் புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அச்சுரங்கம் “புனித செபஸ்தியார் சுரங்கம்” என்றே அழைக்கப்படுகிறத ு.
கொடுங்கோலர்களின ் அழிவு:
சில வருடங்களுக்குப் பின் உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியனு ம் அவன் தம்பி மாக்சிமியனும் கொன்ஸ்தந்தின் என்னும் சிற்றரசனிடம் போரிட நேர்ந்தது. திருத்தந்தை ஆசியுடன் கான்ஸ்டன்டைன் மன்னனின் படைகள் சிலுவைக் கொடியை முன்னிறுத்திப் போரிட்டன. சிலுவைக் கொடியைக் கண்ட தியோக்கிளேசியன் , மாக்சிமியன் படைகள் சிதறுண்டு போயின. செபஸ்தியார் கூறியது போல மாக்சிமியனும், தியோக்கிளேசியனு ம் மாட்சியெல்லாம் இழந்து, நாய்களைப்போல் விரட்டப்பட்டனர் . தியோக்கிளேசியன் திபேரி ஆற்றில் விழுந்து மடிந்தான். மாக்சிமியன் கஞ்சிக்கு காற்றாய் பறந்து, அலைந்து, மடிந்தான்.
கிறிஸ்தவர்களின் வெற்றி:
கான்ஸ்டன்டைன் மன்னன் வெற்றி பெற்றதும் தன் மணிமகுடத்தை திருத்தந்தையின் காலடியில் வைத்தான்.அவர் உரோம பேரரசனாக அவனுக்கு முடி சூட்டினார். கிறிஸ்தவர்களுக் கு விடுதலை அளிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் அரசாங்க மதமாக மன்னனாலும் மக்களாலும் ஏற்றக்கொள்ளப்பட ்டது.சிறைப்பட்ட கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட கொலுமண்டபம் அன்னை மரியின் ஆலயம் ஆக்கப்பட்டது. வேதசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பதற்கிணங்க உரோமை பேரரசு கிறிஸ்தவ பேரரசாக மாறியது.
நன்றி : sebathiyar.blog spot.in
புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டில் நர்போன் நகரில் கி.பி 257 ஆம் ஆண்டு பிறந்து இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்து, வனப்பு மிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.
செபஸ்தியார் துன்புற்ற கிறிஸ்தவர்களுக்
அன்புப்பணி:
செபஸ்தியார் அன்னை மரியை தாயாகவும், இயேசு கிறிஸ்துவைத்தன்
செபஸ்தியார் பொது மக்களிடமும் நன்மதிப்புப் பெற்றிருந்தார்.
சுரங்கக்கோயில்,
துன்பங்களின் தொடக்கம்:
உரோமைப் பேரரசின் சக்கரவர்த்தி தியோக்கிளேசியன்
கிறிஸ்தவர்களுக்
கொடியவன் கோர்வீனன் பங்கிராசின் ஆசிரியர் காசியானைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்றான். பாதாள சிறைகளில் அடைக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்
மார்க்கூஸ்-மர்ச
பொதுச்சிறையில் அடைக்ககப்பட்டிர
அவரது இனிமையான கருத்தாழம் மிக்க உரையினால் சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் திருமுழுக்கு பெற முழு மனதாய் இருந்தனர். ஆனால் சிறைத் தலைவன் நிக்கோஸ் கிராஸ்துஸ்; தளபதியே நான் சிறைக்கதவை பூட்டவேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினான்.
சிறையில் இருந்த அனைவர் நலத்தையும் கருத்தில் கொண்டு அவன் மனைவி ஜோயே அம்மாவிடம் அவனுக்கு புத்திமதி கூறுமாறு செபஸ்தியார் கேட்டுக்கொண்டார
திமிர்வாதத்தை குணமாக்குதல்:
நகர அதிகாரி குரோமோசியான் பக்கவாதத்தால் படுத்தபடுக்கையா
பேராசைக்காரனின்
உரோமைப் பேரரசின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீரத்தளபதியாகிய
புனிதரின் துணிவு:
பிறர் ஆஸ்தியின் பேரில் ஆசைக் கொண்ட புல்வியன் அவரைக் காட்டிக்கொடுக்க
‘மன்னா! ஆத்திரம் வேண்டாம்!
நான் கிறிஸ்தவன்: கிறிஸ்தவனாய்
இருப்பது என் பாக்கியம்’ என்றார் அமைதியாக
மன்னன் அதிர்ந்து போய் அமர்ந்து விட்டான். ‘நன்றி கெட்டவன்’ என்று வாயில் வந்தபடி தளபதியாரைத் திட்டத் தொடங்கினான். ஆனால் அவர் அஞ்சவும் இல்லை. அசையவுமில்லை.
மன்னன், ‘தளபதியாரே நீர் உம்முடைய இந்த வேதத்தை விட்டவிடும். நான் மேலும் உமக்கு பல பட்டங்களும் பதவிகளும் தந்து சிறப்பிக்கிறேன்
ஆத்திரம் கொண்ட மன்னன் மாக்சீமியன் கோத்திராத்தூசிட
செபஸ்தியார்; அம்புகளால் எய்யப்படுதல்:
வெளிப்படையாக மற்ற கிறிஸ்தவர்களைப்
ஆப்பிரிக்க நாட்டு வில் வீரன் அபாக்கியானை அழைத்து, ‘செபஸ்தியாரை இன்று இரவே 2 மணிக்குமேல் காட்டுப்பக்கம்;
முழந்தாள் படியிட்டு ஒர் வானதூதன் போல் இருகைகளையும் விரித்து செபித்துக் கொண்டிருந்த செபஸ்தியாரைப் பார்த்து வியந்து வணங்கினான் அபாக்கியான். பின்னர் மன்னன் கட்டளையை நிறைவேற்ற அழைத்துச்சென்றா
பட்டமரம் பூத்த காட்சி:
காட்டில் பட்டமரத்தில் கட்டிவைத்து மன்னனின் கட்டளைப்படி அம்பால் எய்தனர் வில்வீரர்கள். இறந்துவிட்டார் என நினைத்து கட்டுகளை அவிழ்க்க மரித்தவர் போல் கீழே விழுந்தார். செபஸ்தியாரை கட்டி வைத்த பட்டமரம் பட்டொளிவீசிப் பூத்துக்குலுங்க
அங்குவந்த சில கிறிஸ்தவ வீரர்கள் செபஸ்தியாரின் உடலில் உயிர் இருப்பதைக்கண்டு
கற்பின் சிகரம்:
கால்ஊன்றி நிற்கும் வலுப்பெற்றவுடனே
வேதசாட்சி முடி:
கி.பி 288 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள், செபஸ்தியார் மீண்டும் கால் ஊன்றிய முதல் நாள், செபஸ்தியார் மாடிமீது நின்றபடி மாக்சிமியா! மாக்சிமியா என்று அவனை பெயர் சொல்லி அழைத்தார். இரேனே அம்மாவின் வீடு அரண்மனைக்கு அருகில் என்பதால் மன்னன் அவனைக் கண்டான். அவர் உயிருடன் எலும்பும் தோலுமாக நிற்;பதைக்கண்டு
கோபம் கொண்ட மன்னன் அவர் உயிருடன் இருப்பதைக்கண்டு
உடல் அடக்கம்:
செபஸ்தியாரின் உடல் கல்லுடன் கட்டி சாக்கடையில் போடப்பட்டது. அன்று இரவே நம் புனிதர்; பங்கிராசின் அன்னைலூசினாவின்
கொடுங்கோலர்களின
சில வருடங்களுக்குப்
கிறிஸ்தவர்களின்
கான்ஸ்டன்டைன் மன்னன் வெற்றி பெற்றதும் தன் மணிமகுடத்தை திருத்தந்தையின்
நன்றி : sebathiyar.blog
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்பிரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார ். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்க ு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக் கும் திருமணம் நடைபெற்றது.
1741இல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட் டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப் பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.
நாளடைவில் இந்த டிலன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவ ும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவ ும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தி ல் உள்ள யோபுவின் கதையை சொல்லி கிறித்தவத்தை டிலனாய் அவருக்கு அறிமுகப்படுத்தி னார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாக ப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி (Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.
இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள ் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தா ர்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்ட ார். கிறித்துவுக்காக தனது உயிரையும் கொடுக்க அணியமான தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும் , செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்க ு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில ் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர்.
புனிதர் பட்ட நடவடிக்கைகள்
தேவசகாயம் பிள்ளை கிறித்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) என்பவர் 1756இல் உரோமையில் திருத்தந்தையிடம ் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகள ும் உள்ளன.
பின்னர் 1993இல் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் முதல் படியாக இவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டா ர்.
ஜூன் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரி யவர் நிலைக்கு உயர்த்தினார்.
கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில் தொம்மச்சன் என்பவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையும் துறவறத்தைத் தழுவியவர்கள் அல்ல, மாறாக பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்க து.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார
1741இல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்
நாளடைவில் இந்த டிலன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவ
அப்போது திருவிவிலியத்தி
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.
இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும்
14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில
புனிதர் பட்ட நடவடிக்கைகள்
தேவசகாயம் பிள்ளை கிறித்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) என்பவர் 1756இல் உரோமையில் திருத்தந்தையிடம
பின்னர் 1993இல் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் முதல் படியாக இவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டா
ஜூன் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரி
கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில்
உலகப்போராய் மூளும்
பன்னிரண்டு கோடி கை
பலமிருந்தும் செயலுண்டோ
பன்னிரண்டு கோடி கண்
பார்த்திருந்தும ் பயனுண்டோ
என்னிருந்து என்ன பயன்
ஈழவர்க்கு தாய்தமிழ்நாட்டு
மண்ணிருந்தும் என்னபயன்
வரலாறு காரிதுப்பும்
பெருங்குற்றம் புரிந்துவிட்டோம ்
பேரழிவின் சாட்சிகளாய்
இருந்துவிட்டோம் ;; ஒருநாட்டை
இழந்துவிட்டோம் ;; இனியேனும்
திருந்திவிட்டோம ் எனக்காட்ட
தென்தமிழர் ஆறுகோடிபேர்
திரண்டுவிட்டோம் என்பதுவே
தீர்வாகும் ;; செய்வீரா
முல்லைப் போர்முடிவன்று
முழுப்போரே இனிமேல் தான்
ஈழத்தின் எல்லைக்குள் எரிந்திருந்த
ஈழப்போர் இடம் மாறி
எல்லை தாண்டி புவியின்
எண்பது தேசத் தமிழர்
உள்ளத்து தீயாய் இணைந்து
உலகப்போராய் மூளும்...!!!
!!!...தணிகைச்செ ல்வன்...!!!
பலமிருந்தும் செயலுண்டோ
பன்னிரண்டு கோடி கண்
பார்த்திருந்தும
என்னிருந்து என்ன பயன்
ஈழவர்க்கு தாய்தமிழ்நாட்டு
மண்ணிருந்தும் என்னபயன்
வரலாறு காரிதுப்பும்
பெருங்குற்றம் புரிந்துவிட்டோம
பேரழிவின் சாட்சிகளாய்
இருந்துவிட்டோம்
இழந்துவிட்டோம் ;; இனியேனும்
திருந்திவிட்டோம
தென்தமிழர் ஆறுகோடிபேர்
திரண்டுவிட்டோம்
தீர்வாகும் ;; செய்வீரா
முல்லைப் போர்முடிவன்று
முழுப்போரே இனிமேல் தான்
ஈழத்தின் எல்லைக்குள் எரிந்திருந்த
ஈழப்போர் இடம் மாறி
எல்லை தாண்டி புவியின்
எண்பது தேசத் தமிழர்
உள்ளத்து தீயாய் இணைந்து
உலகப்போராய் மூளும்...!!!
!!!...தணிகைச்செ
From face book .........
Subscribe to:
Posts (Atom)