Saturday, 28 July 2012

My feelings

இந்த வாரத்தில் மிகவும் அதிகமாக கவலைபட்ட மெசேஜ்
தேங்க்ஸ் டு தமிழால் இணைவும் from Facebook

நண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வெயில் வேற...ு கொளுத்தியது..
அப்போது .......
45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் .
சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்லை , உதவி கேட்க நிற்கிறாரா என்றால் தோற்றமும் அப்படி இல்லை.
நல்ல ஆனால் சாயம் போன நூல் சேலை , கனகாம்பரம் பூ , கையில் பழையத் துணிப்பை , தேய்ந்த நாப்பது ரூவாய் செருப்பு .........
அவரின் கண்களில் , முக வாட்டத்தில் ஏதோ ஒன்று மட்டும் என் மனதுக்கு நன்றாக தெரிந்தது .

அடுத்த சில நொடிகளில் அவரின் சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டு , நண்பனின் கையிலிருந்த பத்து ரூபாய் தாட்களை அவரது கையில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் கடைக்குள் சென்று விட்டோம் ..
மனம் கேட்காமல் மேலும் சில காசை தேடி சேர்த்து அவரிடம் கொடுக்க திரும்பி வந்த நேரத்தில் அவர் அங்கில்லை.

கையில் ஒரு துணிப்பையுடன் தளர்ந்த நடையுடன் சாலையோர நடைபாதையில் வெகு தூரம் நடந்துபோய்க்கொண்டிருந்தார் .........

இவர் யாரென்று நினைக்கிறீர்கள் ?????????????

நிச்சயமாய் பிச்சைக்காரர் இல்லை .
வேறு யார் ?????

அதை விடினும் கொடுமையான ' ஆதரவற்றவர்கள் என்றழைக்கப்படும் கைவிடப்பட்டவர்கள் ' ......

பிச்சையெடுக்க மனமும் மானமும் இடம் தராமல் , தன்னைத்தானே நொந்துக்கொண்டு வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருக்கும் மனித இனத்தின் பரிதாப ஜீவன்களில் ஒரு பிரிவினர் .
தன் நிலையை விளக்கி உதவி கேட்கவும் முடியாமல் , அடைக்கலம் தர யாரும் இல்லாமல் , பசியுடனும் பிணியுடனும் வாழ்க்கை போகும் பாதையில் தங்கள் நாளை கடத்திக்கொண்டிருப்பவர்கள் ...

இவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது ..

ஆம் ...

முதுமையை , சொத்து பிரச்னையை காரணம் காட்டி , உடலில் தெம்பில்லாததால் , கேட்க யாருமில்லாததால் , கௌரவ பிச்சைக்காரர்களால் தன் இருப்பிடங்களை விட்டு துரத்தப்படும் முன்னாள் நடுத்தர , பணக்கார ஆதரவற்ற முதியோர் .

உலகிற்கு தான் இவர்கள் அனாதைகள்
ஆனால் நிஜத்தில் ................

தன் கை காய்க்க உழைத்து வளர்த்த மகன் கை நிறைய சம்பாதித்தாலும் முதுமையை , குடும்ப சுமையை , கடன் சுமையை காரணம் காட்டி வீட்டிலிருந்து மிக மரியாதையுடன் வெளியே அனுப்பப்பட்ட ' தலைசிறந்த சுயமரியாதைக்கார்கள் '

மனமெங்கும் தன்னைத் துரத்திய மக்களுக்காக அளவில்லா அன்பினை சேர்த்து வைத்திருக்கும் ' அழியாத வற்றாத செல்வமுள்ள செல்வந்தர்கள் '

பத்து மாத சுமை சுமந்த கடனைக் கூட திருப்ப நினைக்காமல் , அதை மறந்து கூட்டை விட்டு வெளியேறிய ' பெருந்தன்மைக்காரர்கள் '

வாழ்க்கையே வெறுமையாகி , பூங்கா நடைப்பாதைக் கூட பாலைவனமாக தோன்றி , கடந்தக் கால நினைவுகளுடன் , நிகழ் கால துன்பங்களுடன் உழன்றுக்கொண்டிருக்கும் ' உயிருள்ள தூக்கி எறியப்பட்ட விலைமதிக்க முடியா இயந்திரங்கள் .... '

அவ்வப்பொழுது வெகு சில நண்பர்கள் நேரடியாக தமிழ் கூடு - Thamizh Koodu Society மூலம் உதவி செய்து வந்தாலும் ,
ஏற்கனவே இதற்காக எனது ஒரு நல்ல மனதுள்ள நண்பரால் உருவாக்கப்பட்ட Pondicherry Destitute Welfare Societyயோ , புதுவையில் ஏற்கனவே சொந்த வீட்டுடன் பல இலட்சம் வறிய மக்கள் வாழ்வதால் போதிய நிதியில்லாமல் சுருண்டு இருக்கிறது .
நண்பரோ தனது உழைப்பில் வந்த காசில் தனது பெரிய குடும்பத்தையும் காப்பாற்றி , இவர்களுக்கும் உதவி செய்துக்கொண்டிருக்கிறார் . முடிந்தால் நாமும் ஒன்றிணைந்து உதவி செய்வோம் .

மருத்துவமனை , பூங்கா , கடற்கரை , சாலையோரம் என இவர்களை அதிகம் காணலாம் . பெரும்பாலும் தனியே ஒதுங்கி ஒடுங்கி இருப்பார்கள் . புதுவையிலோ Jipmer, கோரிமேடு , GH , Bharathi பூங்கா ஆகியன இவர்களது இருப்பிடமாகிப் போனது . இவர்கள் நிலையை சிறிய காட்சியாக படம் பிடித்து , தனது தொலைக்காட்சிகளில் மக்களுக்கு நல்ல கருத்தினை சொன்ன அல்லது சொன்ன மாதிரி நடித்த எங்கூரு பிரபல கேபிள் டிவி புள்ளி கூட ஒன்னையும் செய்யவில்லை .

இவர்களை எங்கேனும் கண்டால் சரியாக அடையாளம் கண்டு தங்களாலான உதவிகளை செய்யுங்கள் .
குடும்பத்துடன் , குழந்தைக் குட்டிகளுடன் K F C க்கும் , MayaJaal லுக்கும் , Express Avenue வுக்கும் செலவிடும் அர்த்தமற்ற பணத்தை இவர்களுக்கு கணக்கின்றி தாருங்கள் ...
அந்த நிலையற்ற பொருட்கள் தரும் தற்காலிக இன்பத்தை விட்டுவிட்டு உங்கள் மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குங்கள் , நிலையான அமைதியை பெறுங்கள் ....

Gmail , Facebook , A/c office , Elevator , Android Phone , Foreign சரக்கு , Canon Camera , 8 L Car , வயிற்றிற்கு சோறு , உழைத்தால் சம்பளம் என்று கஷ்டப்பட்டு நாமும் வாழ்ந்தாலும் ,
அடுத்த வேளை உணவு சொந்தமில்லாத இவர்களைப் பார்க்கும்போது
நீயும் நானும் BLessed more than Trillion Times we cud feel ..~

No comments:

Post a Comment